சிக்கல் சிங்காரவேலவர் கோவில்
சிக்கல் திருக்கோவில் (வை. மகேந்திரன்) நாகையில் உள்ள மிக பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் தான் சிக்கல். அங்கே தான் வீற்றிருக்கிறார் சிங்கார வேலர் என்ற பெயரில் முருகப்பெருமான். இந்த ஊரில் குடிகொண்டிருக்கும் சிங்கார வேலர் பெருமான் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பதால் தான் இந்த ஊருக்கு சிக்கல் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கி.பி நான்காம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த கோட்செங்கன் சோழன் இந்த கோவிலை கட்டினார். அக்காலத்தில் காராம்பசு ஒன்று பால் பொழிந்து கொண்டே இருந்ததாம் இந்த ஊரில். அந்த பாலில் இருந்து திரட்டப்படும் நெய் ஒன்று மட்டுமே அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார்கள். இன்றும் நெய் அபிஷேகம் செய்யும்பொழுதே இந்த கோவிலின் பிரகாரம் முழுக்க நெய் வாசனையால் மணக்கும் என கூறப்படுகிறது. விசேஷ காலங்களில் முருகனின் முகம் ஆறு வித உணர்வுகளை வெளிப்படுத்தும் என்று கூறுகிறார்கள். சாந்தம் கோபம் நெகிழ்ச்சி மகிழ்ச்சி வீரம் ...