பெர்முடா முக்கோணம் உண்மை என்ன?
பெர்முடா முக்கோணம்
இந்த முக்கோணத்தை கடக்கிற ஏரோப்ளேனாக இருந்தாலும் கப்பலாக இருந்தாலும் ஸ்வாஹா ஆகி விடுகிறது என்பது உண்மையா?
விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
அழகிய தீவு இது. இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை இங்கே. கிழக்கு மேற்கில் நீண்டு பரந்து விரிந்து கிடக்கும் ஒரு தீவு. ஐரோப்பிய அமெரிக்க ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து போகும் தீவு இது.
Bermuda - வின் மக்கள் தொகை கொஞ்சம் தான். 2023 கணக்கீட்டின்படி 64,069 பேர் தான். வேடிக்கை என்னவென்றால் சென்ற ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு 64, 184 பேர் இருந்தனர்.
ஒரு 115 பேர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள் என்று Census ரிப்போர்ட் கூறுகிறது.
இந்த பெர்முடாவுக்குவுக்கு மேற்கு பகுதியில் அட்லாண்டிக் கடலில் தான் அந்த பிரச்சனைக்குறிய முக்கோணம் உள்ளது.
அதாவாது அமெரிக்காவின் தென்கிழக்கு தீவுகளான Miami; San Juan, Puerto Rico; மற்றும் இங்கிலாந்தின் Bermuda இந்த பகுதிகளை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் அது அட்லாண்டிக் ஓசேனில் ஒரு பகுதியை காண்பிக்கும் அது தான் சாட்சாத் BERMUDA முக்கோணம்.
முக்கோணத்தின் பெரும்பகுதி பெர்முடா - வின் நீர் பகுதி ஆகையால் இது பெர்முடா முக்கோணம் என அழைக்கப்படுகிறது.
17.09.1950-ல் Edward Van Winkle Jones... என்கிற ஒரு நூலாசிரியர் தான் முதன்முதலில் இந்த முக்கோணத்தை பிசாசு முக்கோணம் பேய் பகுதிங்கிற ரீதியில the Miami herald -ங்கிற பத்திரிகையில் SEA MYSTERY AT OUR BACK DOOR ங்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுகிறார்.
அவர் என்ன எழுதுகிறார் என்றால்,
1950-களிலும் அதற்கு முன்பும் பல சமயங்களில் அந்த முக்கோணத்தை கடந்து போன விமானங்கள் காணாமல் போயிற்று. அதை ஆய்வு செய்யப் போன அமெரிக்க போர் கப்பலும் மாலுமிகள் மற்றும் ராணுவ வீரர்கள் ஒரு 15 பேரும் கரைக்கு திரும்பவில்லை. எங்கே போனார்கள் எப்படி அந்த விமானங்களும் கப்பல்களும் காணாமல் போயின..... விண்ணையும் மிஞ்சும் நமது மதிநுட்பம் தொழிற்நுட்பம் எல்லாவற்றையும் மீறி இது எப்படி நடந்தது..... இதற்கு விடை தெரியாத வரை அது ஒரு சைத்தானின் பகுதி என்று சொல்வதில் என்ன தவறு என்று கேட்டிருந்தார்.
இன்னும் ஒரு படி மேலே போய், 1962-ல் ஆல்லன் எக்கர்டு என்கிற ஒரு கட்டுரையாளர் -ஆமாம் ஆமாம் அது உண்மை...... காணாமல் போய்கொண்டிருந்த ஒரு வின் கப்பலின் கேப்டன், -நாங்கள் எங்கு இருக்கிறோம் என்று தெரியவில்லை. வெள்ளை வண்ணத்தில் ஏதோ நீரைப் போல் தெரிகிறது. பிறகு பச்சையாக தெரிகிறது. என்ன நடக்கிறது என்று அறிவுக்கு எட்டவில்லை. மர்மமாக உள்ளது- என்று கூறியதை தான் கேட்டதாக எழுதுகிறார். கடற்படை அதிகாரிகள் தங்கள் அனுமானத்தின்படி மறைந்த விமானங்கள் நீர் சுழற்சியின் உள்ளே புகுந்தோ அல்லது விசிறி தள்ளியோ செவ்வாய் கிரகத்திற்கு போய் விட்டன என்று கூறுவதாக அக்கட்டுரையில் ஒரு போடு போட்டார்.
பின் 1964-ல் வின்சன்ட் காடிஸ்ங்கிற எழுத்தாளரும்
1973-ல் சார்ல்ஸ் மற்றும் ரிச்சர்ட்ஸ் போன்றோர்கள்
அதையே பெரிதுபடுத்தி எழுதினார்கள்.
காடீஸ் அர்கோஸி என்ற writer அந்த முக்கோணத்தின் பரப்பளவை ஆராய்ந்து சுமார் 1.5 மில்லியனிலிருந்து 3 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவை கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
Larry Kusche - என்கிற எழுத்தாளர் தனது The Bermuda Triangle Mystery: Solved - என்ற தனது புத்தகத்தில் கூறியிருப்பது தான் இன்றைய விஞ்ஞான யுகத்திற்கு ஒத்துபோகிறது.
அவர் கூறுவது என்னவென்றால்,
அர்கோஸி-யின் Bermuda முக்கோணத்தின்பரப்பளவு கணக்கு அர்கோஸியின் சொந்த கணக்கு. அதை பின்பற்றுவது அவரவர் விருப்பம். முக்கோணத்தை கடக்கும் கப்பல்கள் விமானங்கள் காணாமல் போய்விட்டதாக கூறப்படும் அந்த செய்திகளே ஒரு கற்பனை என்கிறார் லாரி குஸே.
"ஏதோ காரணத்தினால் மூழ்கிய செய்தியை உலகத்தாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக Edward Van Winkle Jones கிளப்பி விட்ட புரளி ஆகும் அது.
மற்ற எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை வைத்துக்கொண்டு அந்த புரளியை மெருகேற்றிவிட்டார்கள்" என்கிறார் அவர்.
"ஒரு படகு காணாமல் போனால் பல காரணங்கள் இருக்கலாம். இப்படி தான் காணாமல் போயிருக்கும் என்பது ஒரு அனுமானம். பெர்முடா முக்கோணம் தான் அவற்றை விழுங்கியது என்றால், அதற்கான ஆதாரங்கள் எங்கே? தொலைந்துபோன விமானத்தின் பைலட் ஏதோ வாக்கி-டாக்கியில் செய்தி சொன்னார் என்பது போல் ஆல்லன் எக்கர்டு கூறியது கற்பனையின் உச்சக் கட்டம்" என்கிறார் லாரி குஸே.
2013 ஆம் ஆண்டு ஆய்வில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் , கப்பல் போக்குவரத்துக்கு உலகின் 10 மிகவும் ஆபத்தான நீர்களை அடையாளம் கண்டுள்ளது, ஆனால் பெர்முடா முக்கோணம் அவற்றில் இல்லை.
எனவே பெர்முடா முக்கோணம் பிசாசு பகுதி மர்மமான இடம் என்று கூறுவது ஆய்வுக்குரியதாகவே தெரிகிறது. என்ன காரணத்திற்காக அதை ஒரு மர்மப் பகுதி என்று கூறுகிறார்கள் என்பது தான் மர்மமாக உள்ளது.
ஆக பெர்முடா முக்கோணத்தின் மர்மம் என கூறுவதுதான் மர்மமானதாக தெரிகிறது. விமானங்கள் கப்பல்கள் விழுங்கப்படுகின்றன என்பதற்காக அல்ல. ஏன் அப்படி ஒரு புரளி கிளப்பப்பட்டது என்பதற்காக!
நன்றி.
இது உங்கள் வை.மகேந்திரன்
[வீடியோ கிளிப்பிங்ஸை எனது MAHENDIRAN GLOBAL TV யில் காண்க.]https://youtu.be/u3m2EQA0QkQ?si=jO8-2AubfaxiXm5v
Comments
Post a Comment