கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது!

க்யூபா ஒரு அற்புதமான சுவர்க்க பூமி என்று  சொன்னால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும்.


நாட்டின் அழகு மட்டும் அல்ல ஆட்சிமுறையும் சூப்பரா இருக்கும் நாடு க்யூபா.

க்யூபா பற்றி ஒரு மினி ஸ்டோரியை இங்கு காண்போம்.



ஸ்பெயினிடமிருந்து 1868-ல் கியூபா சுதந்திரம் பெற்றாலும் 1902-ல் தான் க்யூபா சுதந்திர அங்கீகாரம் அடைந்தது.
குடியரசு ஆனது. 1959-ல் தான்!

அரசாங்கம் சோசியலிசம்
எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதே பொதுவான சித்தாந்தம்.
நாட்டுப்பற்று இல்லேல் மரணம் என்கிற அளவுக்கு அனைவரும் நாட்டை நேசிக்கிறார்கள்.

தலைநகரம் அவானா

பெரிய நகரமும் இதுவே. இரண்டாவது பெரிய நகரம் சான்டியாகோ,









க்யூபாவின் மக்கள் தொகை சுமார் 11 மில்லியன் பேர்.
பரப்பளவு 1,10,860 ச.கி.மீ
மொழி ஸ்பானிஷ்.
இனம் வெள்ளைக்காரர்கள் 64
மான் நிறத்தவர் 26
கியூபன் கருப்பினர் 10

60% கிறிஸ்தவம்
30 மதமில்லை
10 நாட்டுப்புற மதம்.

அழகான தீவு நாடுகளில் இதுவும் ஒன்று. கடற்கரை கண்ணை பறிக்கும் இங்கே என்பார்கள். சுற்றுலா பயணிகள் வருகைக்கு இது தான் சீசன் என்றில்லை. எப்பொழுதும் வருகிறார்கள்.






முழுக்க முழுக்க இலவச மருத்துவம் மற்றும் கல்வி.
தனியாருக்கென்று எதுவும் இல்லை. அரசாங்கம் எல்லாவற்றையும் சமச்சீராக பார்த்துக்கொள்கிறது.

அழகான பேராலயங்கள் நிறைய இருக்கின்றன இந்நாட்டில்.



சோஸியலிஸ கொள்கைகளில் வெற்றிகண்ட நாடு இது. கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது என்று கூறினால் அது மிகையில்லை.

2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவார்கள். காரணம், பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் தான் இது சாத்தியமாயிற்று.

இங்கு தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர்.

தனியார் மருத்துவமனை இல்லாத ஒரே நாடு இதுவாகத்தான் இருக்கும்.

- வை மகேந்திரன்







Comments

Popular posts from this blog

கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?