Posts
உளவியல்: "மனம் ஒரு பேய்" - பொய்கை. அவை.மகேந்திரன்
- Get link
- X
- Other Apps
மனம் ஒரு பேய் - பொய்கை அவை. மகேந்திரன் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ இவ்வுலகம் மோசமானது என்று புலம்பும் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்கள் அப்படித்தான் என்று அவர்களை புறம் தள்ளிவிட முடியாது. அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. தன் கருத்துக்கு யாரும் ஒத்துப் போகவில்லையே என்கிற கோபம் தான் இவர்களை அப்படி புலம்ப வைக்கிறது. சமயம் கிடைத்தால் தவறு செய்வதில் தவறு இல்லை- என்கிற லாஜிக் இவர்களுக்கு ஒத்துவராது. உலகத்தோடு ஒத்துப் போங்கள் என்கிற வாசகம் இவர்களுக்கு பிடிக்காது. சூழ்நிலைக்கேற்ப குணாதிசயங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு கசப்பானதாகும். தவறுகளுக்கு ஏதோ ஒரு சப்பைக் கட்டு காரணங்கள் கூறுபவர்களை இவர்கள் வெறுப்பார்கள். உள்ளுக்குள் கோபக்கணல் கொப்புளித்துக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு. அது யார் மீது என்றெல்லாம் இவர்களுக்கு தெரியாது. தனது தாய் தந்தை மகன் மகள் மனைவி என்று யார் தனக்கு விரோத கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அவர்களை கூட வெறுப்பார்கள் இவர்கள். நிரந்தர பணி இவர்களுக்கு இருக்காது. மன அழுத்தம் இருக்கும். பல சாதனைகள் பாதியில...
இன்று (28.10.2023) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 2.24 வரை சந்திர கிரஹணம்.
- Get link
- X
- Other Apps
You may watch the video ⬆️⬆️ 28.10.2023 சனிக்கிழமை இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 2.24 மணி வரை சந்திர கிரஹணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நிலைபெறும்போது புவியின் நிழல் சந்திரனில் தெரியும் இதுவே சந்திர கிரஹணம் ஆகும். மூன்றும் நேர்கோட்டில் அமைந்தால் மட்டுமே அது முழு சந்திர கிரஹணமாக கருதப்படும். இன்று (28.10.2022) இரவு முதல் நாளை காலை வரை நிகழும் கிரஹணம் சற்றேறத் குறைய மூன்றும் நேர்கோட்டில் அமைவதால் 90 விழுக்காடு முழு-சந்திர கிரஹணமாகவே தெரியும் என அறியப்படுகிறது. 2 8.10.23 நள்ளிரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்கும் சந்திரனின் மறைவு பார்வை 29.10.23 அதிகாலை 2.24 மணிக்கு முடியும். 29. 08.23 அதிகாலை 1.05 முதல் 2.24 வரை சந்திரனில் புவியின் நிழல் சற்றேறக்குறைய முழுமையாக மறைகிறது என்று நாசா கூறுகிறது. இந்தியா மட்டுமல்லாது நேப்பாளம் இலங்கை ஆஸ்திரேலியா ஆஃப்கனிஸ்தான் பாகிஸ்தான் மத்திய தரை கிழக்கு பகுதிகள் தென்கிழக்கு ஆசிய மேற்கு பகுதிகளில் இந்த சந்திர கிரஹணத்தை காணமுடியும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. முழுநேரம் திறந்திருக்கும் திருப்ப...
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் புதியச் செய்திகள்.
- Get link
- X
- Other Apps
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் புதிய செய்திகள் இது மகேந்திரன் குலோபல் டிவி யூட்யூப் ச்சேனல் வீடியோவை காண்க. ஹமாஸின் தீவிரவாத கருத்துக்களை கையில் வைத்துக் கொண்டு இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் கோருவது இயலாத ஒன்று என்கிறார் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்றைய தனது அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றே அப்பாவி மக்கள் கொல்லப்படும் நிலையை நிறுத்தி வைக்கும் ஹமாஸின் தீவிரவாத கருத்துக்களை கையில் வைத்துக்கொண்டு இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் கோர முடியாது என்று கூறியிருப்பது முக்கியச் செய்தியாக உள்ளது. இரு தரப்பும் அமைதியை விரும்பினால் மட்டுமே அதற்கு சாத்தியம் என்கிறார் ஜோ-பைடன். ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் இந்த கருத்து ஒரு தலைபட்சமானது என்கின்றன. ஈரான் இராக் துருக்கி லெபனன் போன்ற நாடுகள், இஸ்ரேலை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் இயலா தன்மையின் வெளிப்பாடு இது என்கின்றன. இதற்கிடையில், ஹமாஸின் ஆளுமை காஸா-வில் தொடரும் வரை இஸ்ரேல் தன் தாக்குதலை நிறுத்தாது என்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ. தங்களது இலக்கு ஹமாஸின் காஸா மீதான நாட்டான்மை தனத்தை ஒழிப்பது தான். ஹமாஸ் படையை காசாவை விட்டு வெளி...
இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல். காஸா-வை இஸ்ரேல் தன்வசம் கொண்டுவர திட்டம். பாலஸ்தீனியர்கள் காஸா-வை விட்டு வெளியேறவேண்டும்- இஸ்ரேல் கங்கனம்.
- Get link
- X
- Other Apps
இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல். காஸா-வை இஸ்ரேல் தன்வசம் கொண்டுவர திட்டம். பாலஸ்தீனியர்கள் காஸா-வை விட்டு வெளியேறவேண்டும்- இஸ்ரேல் கங்கனம். செய்திகள் மற்றும் வீடியோ..... உள்ளே..... கடுங்கோபத்தில் செயல்படும் ஒரு தன்மையை இஸ்ரேல் காட்டுகிறது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். இஸ்ரேல் தன் தரைப்படை தாக்குதலை மிகவும் தீவிரப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. வடக்கு காசாவின் முக்கியமான பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது இஸ்ரேல். ஹமாஸ் படையினர் பதிலடி தருகிறதா இல்லையா என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது துருப்புகளுக்கு இஸ்ரேல் அறிவித்துள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கு தனது இலக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறார் இராணுவ தளபதி. காசாவில் பாலஸ்தீனியர்களின் நாட்டாமை தனம் தகர்த்தெறியப்படவேண்டும். புதிய குடியேற்றங்கள் இருக்கக்கூடாது. காசா டெர்ரிட்டரியை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இஸ்ரேல் செயல்படுவதாக தெரிகிறது . இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஒன்றை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காசாவின் பகுதிகளை ஆக்கிரமிக்க முயல்வது மிகப்பெரிய தவறாகிவிடும். ....