இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல். காஸா-வை இஸ்ரேல் தன்வசம் கொண்டுவர திட்டம். பாலஸ்தீனியர்கள் காஸா-வை விட்டு வெளியேறவேண்டும்- இஸ்ரேல் கங்கனம்.

இஸ்ரேலின் ஆக்ரோஷமான தாக்குதல்.

காஸா-வை இஸ்ரேல் தன்வசம் கொண்டுவர திட்டம்.

பாலஸ்தீனியர்கள் காஸா-வை விட்டு வெளியேறவேண்டும்- இஸ்ரேல் கங்கனம்.

செய்திகள் மற்றும் வீடியோ..... உள்ளே.....

கடுங்கோபத்தில் செயல்படும் ஒரு தன்மையை இஸ்ரேல் காட்டுகிறது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். 


இஸ்ரேல் தன் தரைப்படை தாக்குதலை மிகவும் தீவிரப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.


வடக்கு காசாவின் முக்கியமான பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது இஸ்ரேல். ஹமாஸ் படையினர் பதிலடி தருகிறதா இல்லையா என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது துருப்புகளுக்கு இஸ்ரேல் அறிவித்துள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேலுக்கு தனது இலக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறார் இராணுவ தளபதி.


காசாவில் பாலஸ்தீனியர்களின் நாட்டாமை தனம் தகர்த்தெறியப்படவேண்டும். புதிய குடியேற்றங்கள் இருக்கக்கூடாது. காசா டெர்ரிட்டரியை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இஸ்ரேல் செயல்படுவதாக தெரிகிறது .

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஒன்றை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காசாவின் பகுதிகளை ஆக்கிரமிக்க முயல்வது மிகப்பெரிய தவறாகிவிடும். . பாலஸ்தீனிய குழந்தைகள் பெண்கள் கொல்லப்படுவது மனித உரிமைக்கு முரணானது என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். ஐநா-வும் இதே கருத்தை முன்வைத்துள்ளது.


தூய்மையான குடிநீருக்கு காசாவின் வடக்குப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் தண்ணீரை பதட்டத்தில் இருக்கும் அங்குள்ள மக்கள் பருகுவது நோய் உற்பத்திக்கு வழிவகுத்துவிடும் என்று காசாவின் நோய் தடுப்பு அமைப்பு மற்றும் சமூக நலத்துறையும் கூறுகின்றன.


காசாவின் அனைத்து பகுதிகளிலும் நிமிடத்திற்கு ஒரு காயம்பட்டவர் அல்லது ஊனமடைந்தவர் அல்லது இறந்தவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறார். இது பேராபத்திற்கான அறிகுறி என்கிறார்கள் அங்குள்ள பத்திரிகையாளர்கள்.


இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஆர்வம் எதுவும் காட்டவில்லை என்றே தோன்றுகிறது.


காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைத்து தந்த மிகப்பெரிய Warehouse-யை இஸ்ரேல் நிர்மூலம் ஆக்கிவிட்டதாக கூறப்படுகிறது. 1964-லிருந்து அது அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


இதற்கிடையில் West bank பகுதியில் பாலஸ்தீனியம் இஸ்ரேலை ஆக்கிரமித்ததாக கூறி அங்குள்ள மக்களை போராளிகள் என்று காரணம் காட்டி இஸ்ரேல் 1000 கணக்கானோரை கொன்றுள்ளதாக ஹமாஸ் அல் ஜஸீரா தொலைகாட்சிக்கு செய்தி தந்துள்ளது.

நன்றி வணக்கம்.

வை மகேந்திரன்



Comments

Popular posts from this blog

கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?

கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது!