உளவியல்: "மனம் ஒரு பேய்" - பொய்கை. அவை.மகேந்திரன்
மனம் ஒரு பேய்
- பொய்கை அவை. மகேந்திரன்
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
இவ்வுலகம் மோசமானது என்று புலம்பும் பலரை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அவர்கள் அப்படித்தான் என்று அவர்களை புறம் தள்ளிவிட முடியாது.
அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. தன் கருத்துக்கு யாரும் ஒத்துப் போகவில்லையே என்கிற கோபம் தான் இவர்களை அப்படி புலம்ப வைக்கிறது.
சமயம் கிடைத்தால் தவறு செய்வதில் தவறு இல்லை- என்கிற லாஜிக் இவர்களுக்கு ஒத்துவராது. உலகத்தோடு ஒத்துப் போங்கள் என்கிற வாசகம் இவர்களுக்கு பிடிக்காது.

சூழ்நிலைக்கேற்ப குணாதிசயங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு கசப்பானதாகும்.
தவறுகளுக்கு ஏதோ ஒரு சப்பைக் கட்டு காரணங்கள் கூறுபவர்களை இவர்கள் வெறுப்பார்கள்.
உள்ளுக்குள் கோபக்கணல் கொப்புளித்துக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு. அது யார் மீது என்றெல்லாம் இவர்களுக்கு தெரியாது. தனது தாய் தந்தை மகன் மகள் மனைவி என்று யார் தனக்கு விரோத கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அவர்களை கூட வெறுப்பார்கள் இவர்கள்.
நிரந்தர பணி இவர்களுக்கு இருக்காது. மன அழுத்தம் இருக்கும். பல சாதனைகள் பாதியிலேயே நிற்கும்.
வேடிக்கை, உலகம் இவர்களை மதிக்கும் ஆனால் ஏற்றுக்கொள்ளாது. அரசியலில் இவர்களை காண முடியாது. அப்படி இருந்தால் உட்கட்சியிலேயே இவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அரசு பணியில் இவர்கள் இருந்தால், உயர்அதிகாரி உட்பட யாருக்கும் இவர்களை பிடிக்காது....
(தொடரும்)

Comments
Post a Comment