இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம் புதியச் செய்திகள்.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்
புதிய செய்திகள்
இது மகேந்திரன் குலோபல் டிவி யூட்யூப் ச்சேனல்
வீடியோவை காண்க.
ஹமாஸின் தீவிரவாத கருத்துக்களை கையில் வைத்துக் கொண்டு இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் கோருவது இயலாத ஒன்று என்கிறார் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்றைய தனது அறிவிப்பில், போர் நிறுத்தம் ஒன்றே அப்பாவி மக்கள் கொல்லப்படும் நிலையை நிறுத்தி வைக்கும் ஹமாஸின் தீவிரவாத கருத்துக்களை கையில் வைத்துக்கொண்டு இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் கோர முடியாது என்று கூறியிருப்பது முக்கியச் செய்தியாக உள்ளது.
இரு தரப்பும் அமைதியை விரும்பினால் மட்டுமே அதற்கு சாத்தியம் என்கிறார் ஜோ-பைடன்.
ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் இந்த கருத்து ஒரு தலைபட்சமானது என்கின்றன. ஈரான் இராக் துருக்கி லெபனன் போன்ற நாடுகள், இஸ்ரேலை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் இயலா தன்மையின் வெளிப்பாடு இது என்கின்றன.
இதற்கிடையில், ஹமாஸின் ஆளுமை காஸா-வில் தொடரும் வரை இஸ்ரேல் தன் தாக்குதலை நிறுத்தாது என்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ.
தங்களது இலக்கு ஹமாஸின் காஸா மீதான நாட்டான்மை தனத்தை ஒழிப்பது தான். ஹமாஸ் படையை காசாவை விட்டு வெளியேற்றுவதே இஸ்ரேலின் தற்பொழுதைய இலக்கு என்கிறார் நெத்தயான்ஹீ. தரைவழி தாக்குதல் மட்டுமே இதற்கு சிறந்த முறையில் உதவும் என்கிறார் அவர்.
பாலஸ்தீனிய வெளியுறவு துறை அமைச்சர் ரியாத் அல் மாலிக் உலகளாவிய குற்றவியல் நீதிமன்ற உயர் அதிகாரியை புதன் கிழமை சந்தித்ததாகக் கூறினார். பாலஸ்தீனிய விவகாரம் குறித்து தான் ஐநாவிடம் கேட்டுக்கொண்டது பலனளிக்காததால், இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக ரியாத் கூறியுள்ளார்.
காஸா - வில் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அது மேலும் கூறுகிறது,
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் உதவிப் பணிகளுக்கு ஹமாஸ் படைகளோ இஸ்ரேல் துருப்புக்களோ இடையூறாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள பத்திரிகை நிருபர் தனது காஸா பகுதி பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் மிகவும் அபாயகரமானது என்று விவரிக்கிறார்.
மிக இலகுவாக இஸ்ரேல் படைகள் காஸா - வின் மிக முக்கிய பகுதிகளுக்கு முன்னேறுகிறது என்கிறார் அவர். காசாவை ஆளும் அல்லது அதிகாரத்தில் வைத்திருக்கும் ஹமாஸ் குழுக்களுக்கு சொந்தமான நவீன பீரங்கிகள் வான்வழி தளவாடங்களை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியிருக்கிறது என அவர் கூறுகிறார்.
'ஹமாஸின் பதிலடி இஸ்ரேலை மேலும் கோபப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார், ஹமாஸ் விளையாட்டுத்தனமாக செய்த தவறு அவதியின் துயரத்தை 3வது வாரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் 3 ஆவது வாரத்தை தொட்டிருக்கின்றபடியால், மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகள் கவலையடைந்துள்ளன.
இன்று மதியம் வெளியிடப்பட்ட இஸ்ரேல் பிரதமரின் தொலைகாட்சி வழி செய்தி மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஹமாஸ் மீது பொழியும் எங்களின் வான்வழி குண்டுமழை ஒரு புறம், மிக அதிதீவிர எங்களது தரைவழி தாக்குதல் இரண்டும் ஹமாஸ் படைகள் அழியும் வரை தொடரும் என்று நெத்தன்யாஹு தெரிவித்துள்ளார்.
நன்றி
இதுவரை இவைகளே செய்திகள்.
மற்றச்செய்திகள் மற்றொரு நேரத்தில்.
இது மகேந்திரன் குலோபல் டிவி யூட்யூப் ச்சேனல்.
வீடியோவை காண்க.
Comments
Post a Comment