கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?
கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்? தொகுத்தெழுதியவர்: வை.மகேந்திரன் இவர் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் என்பது அறிந்ததே. கோரக்கர் யார்? மனிதனாக பிறந்து தெய்வ சங்கல்பம் பெற்றாரா அல்லது தெய்வ பிறப்பாக ஜனனமாகி உருவகமானாரா..... வாருங்கள் இக்கதையை படங்களுடன் வீடியோவாக MAHENDIRAN GLOBAL TV-யில் காண்போம். பிறப்பு இருவகை என்று வேதங்கள் கூறுகின்றன. கருமத்தின் பயனாக கருவாக உருவாகி பரிணாமம் ஆவது ஒன்று. இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அப்படி ஆனவை தான். இன்னொன்று, சிவபெருமானின் ஆசியில் தெய்வப் பிறப்பாக உருவகம் ஆகி அமானுஷ்ய சக்திகள் பெற்று திகழ்வது. கோரக்கர் தெய்வ பிறப்பாக, தெய்வத்தால் உருவாக்கப்பட்டவர். ஒரு முறை, சமுத்திரத்திற்கு அருகே சிவபெருமான் உமையாளுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். உமையாள் அப்போதனைகளை கவனித்தாரோ இல்லையோ, அந்த சமுத்திரத்தில் உள்ள மீன் ஒன்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த மீன் துள்ளி குதித்தது. சிவபெருமான் வா இங்கே இன்று அதட்டி அந்த மீனை அழைத்தார். நெடுஞ்சானாக ஒரு முனிவர் ரூபத்தில் காட்சியளித்தது அந்த மீன். ஓம்...
Comments
Post a Comment