இன்று (28.10.2023) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 2.24 வரை சந்திர கிரஹணம்.
இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 2.24 மணி வரை சந்திர கிரஹணம்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நிலைபெறும்போது புவியின் நிழல் சந்திரனில் தெரியும் இதுவே சந்திர கிரஹணம் ஆகும்.
மூன்றும் நேர்கோட்டில் அமைந்தால் மட்டுமே அது முழு சந்திர கிரஹணமாக கருதப்படும்.
இன்று (28.10.2022) இரவு முதல் நாளை காலை வரை நிகழும் கிரஹணம் சற்றேறத் குறைய மூன்றும் நேர்கோட்டில் அமைவதால் 90 விழுக்காடு முழு-சந்திர கிரஹணமாகவே தெரியும் என அறியப்படுகிறது.
2 8.10.23 நள்ளிரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு தொடங்கும் சந்திரனின் மறைவு பார்வை 29.10.23 அதிகாலை 2.24 மணிக்கு முடியும்.
29. 08.23 அதிகாலை 1.05 முதல் 2.24 வரை சந்திரனில் புவியின் நிழல் சற்றேறக்குறைய முழுமையாக மறைகிறது என்று நாசா கூறுகிறது.
இந்தியா மட்டுமல்லாது நேப்பாளம் இலங்கை ஆஸ்திரேலியா ஆஃப்கனிஸ்தான் பாகிஸ்தான் மத்திய தரை கிழக்கு பகுதிகள் தென்கிழக்கு ஆசிய மேற்கு பகுதிகளில் இந்த சந்திர கிரஹணத்தை காணமுடியும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
முழுநேரம் திறந்திருக்கும் திருப்பதி உள்ளிட்ட சில திருக்கோவில்களில் கிரஹணத்தின் பொழுது நடை கண்டிப்பாக சாத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- மகேந்திரன் வை

Comments
Post a Comment