நீங்கள் எந்த கட்சி ?

இப்படி ஒரு கேள்வியை யாரிடமாவது நீங்கள் கேட்டால், 100-ல் 36 பேர்கள் தான் இன்ன கட்சி என்று சொல்வார்களாம்.

மீதி 64 பேர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்களாம். ஆங்கிலத்தில் NEUTRALISTS என்பார்கள் இவர்களை.

இவர்களை நம்பி தான் தேர்தல் நடக்கிறது என்பது ஒரு வியப்பான செய்தி.

இவர்களை இலக்குவைத்து தான் இலவச அறிவிப்புகள். 

இவர்கள் நினைத்தால் ஆட்சியை மாற்றமுடியும்.

இவர்கள் பெரும்பாலும் கிராமத்து சாயலில் வாழ்பவர்கள். தேசப்பற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. 

சமயத்தில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினர் கார்டு கூட இவர்களிடம்  இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்று கட்டாயமில்லை.

இவர்களை பொருத்தவரை ஆட்சி என்பது ஒரு அதிகாரமேடை அது நேர்மையாக நடக்க வேண்டும்; ஆள்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். 

இந்த வருடம் மேடையில் யார் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை ரசிப்பது தான் இவர்கள் வேலை. 

அரசியல் கட்சிகள்,  தேர்தல் வாக்குறுதி தருவதும், வாக்களிக்க தலைக்கு இத்தனை ரூபாய் காசு தருவதும் இவர்களுக்கு தான். 

இவர்கள் நினைத்தால் உதவாக்கரைகள் ஆள வரலாம். 

இவர்கள் விரும்புவதால் தான் ஆளும் அரசு இத்தனை சாராயக்கடைகளை திறந்திருக்கிறது. 

எதையும் நிதானித்து எதிர்க்க தெரியாதவர்கள் இவர்கள். தீயவர்களை அரசியலில் அமர வைத்து அழகு பார்ப்பவர்கள். எதிர்கால சிந்தனையெல்லாம் அறவே இருக்காது இவர்களிடம்.

இவர்களால் தான் திமுக அதிமுக  காங்கிரஸ் போன்ற கட்சிகள் களைகட்டுகின்றன.

இவர்கள் ஒழுங்காக இருந்திருந்தால் ஊழல் வந்திருக்காது. அரசு அலுவலகங்கள் சிறப்பான செயல்பாட்டில் இருந்திருக்கும்.

இப்பொழுது சொல்லுங்கள். குற்றவாளிகள்  யார் என்று.

இன்றைய அரசியல்வாதிகளா....அல்லது இவர்களா?

இவர்கள் தான் என்று நீங்கள் சொன்னால், அதில் நீங்களும் ஒருவர் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுத்தான்  ஆகவேண்டும்.

நன்றி

வை.மகேந்திரன்





Comments

Popular posts from this blog

கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?

கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது!