நாகை - காங்கேசன்துறை (இலங்கை) கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.


நாகையிலிருந்து  காங்கேசன்துறைக்கு (இலங்கை) கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.

நாகை மக்களின் நெடுநாளைய கனவு பூர்த்தியாகிறது. 

இன்று 14.10.2023 சனிக்கிழமை நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 


கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.

இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து  கட்டுப்பாட்டுத் துறை, இந்திய சுங்கத் துறை  மற்றும் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இது இயங்கும் என்று கூறப்படுகிறது.

தினமும் காலை 7 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் சுமார் 3½ மணி நேரம் பயணித்து 10.30 அல்லது 11 மணிக்கு இலங்கை காங்கேஸன் துறையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தினமும் காங்கேஸன்துறையிலிருந்து பிற்பகல் சுமார் 1½ மணிக்கு புறப்படும் இதே கப்பல் சுமார் 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும் என கூறப்படுகிறது.

14 கப்பல் ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பலாகும் இது. Ferry என இது அழைக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்திலிருந்து குறுகிய தூரத்தில் (60 Nautical miles) உள்ள இலங்கை துறைமுகப் பகுதி காங்கேஸன்துறை தான் என்பதால் இந்த கடல் வழி போக்குவரத்து தற்பொழுது இவ்வாறு  அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பயணக்கட்டணம் ரூ 7670 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட், விசா மற்றும்  டிக்கட்டுடன் தான் பயணிக்க முடியும். பயண நேரத்திற்கு 3 மணி நேரம் முன்னதாகவே பயணிகள் மேற்காணும் ஆவணங்களுடன் துறைமுக துறைமுக ச்செக் இன் பகுதிக்கு வந்துவிடவேண்டும். இமிகிரேஷன் சோதனை முடிந்தபின்பே பயணிகள் கப்பலுக்கு (Ferry) அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

ஒரு பயணி 50 கிலோ வரை அனுமதிக்கு உட்பட்ட லக்கேஜுடன் பயணிக்கலாம். சோதனையிடப்பட்ட பின்பே லக்கேஜ்கள் அனுமதிக்கப்படும்.  

இந்தியர்கள், திரும்ப வரும் கட்டண சீட்டு வைத்திருந்தால் மட்டுமே இலங்கை துறைமுகத்தில் அந்த சுங்கத்துறையினரால்  இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அது இதே கப்பல் அல்லது விமான டிக்கெட்டாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்திய மத்திய பாதுகாப்பு துறை, சுங்கத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறையின் கண்காணிப்பில் இந்த கடல் வழி போக்குவரத்து  இயங்கும் என்று கூறப்படுகிறது. முழு விபரங்களை இந்திய கப்பல் போக்குவரத்து துறை வலைதளங்களுக்கு சென்று உறுதிசெய்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?

கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது!