Posts

சிக்கல் சிங்காரவேலவர் கோவில்

Image
சிக்கல் திருக்கோவில் (வை. மகேந்திரன்) நாகையில் உள்ள மிக பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் தான் சிக்கல். அங்கே தான் வீற்றிருக்கிறார் சிங்கார வேலர் என்ற பெயரில்  முருகப்பெருமான். இந்த ஊரில் குடிகொண்டிருக்கும் சிங்கார வேலர் பெருமான் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பதால் தான் இந்த ஊருக்கு சிக்கல் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கி.பி நான்காம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த கோட்செங்கன் சோழன் இந்த கோவிலை கட்டினார். அக்காலத்தில் காராம்பசு ஒன்று பால் பொழிந்து கொண்டே இருந்ததாம் இந்த ஊரில். அந்த பாலில் இருந்து திரட்டப்படும் நெய் ஒன்று மட்டுமே அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறுகிறார்கள். இன்றும் நெய் அபிஷேகம் செய்யும்பொழுதே இந்த கோவிலின் பிரகாரம் முழுக்க நெய் வாசனையால் மணக்கும் என கூறப்படுகிறது. விசேஷ காலங்களில் முருகனின் முகம் ஆறு வித உணர்வுகளை வெளிப்படுத்தும் என்று கூறுகிறார்கள். சாந்தம் கோபம் நெகிழ்ச்சி மகிழ்ச்சி வீரம் ...

பெர்முடா முக்கோணம் உண்மை என்ன?

Image
பெர்முடா முக்கோணம் இந்த முக்கோணத்தை கடக்கிற ஏரோப்ளேனாக இருந்தாலும் கப்பலாக இருந்தாலும் ஸ்வாஹா ஆகி விடுகிறது என்பது உண்மையா? விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று  பார்ப்போம். பெர்முடா இங்கிலா ந்தின் கட் டுப்பாட்டில்  இருக்கிறது. பெர்முடா ஒரு தனி சமஸ்தானம் ஆகும். அழகிய தீவு இது. இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை இங்கே. கிழக்கு மேற்கில் நீண்டு பரந்து விரிந்து கிடக்கும் ஒரு தீவு. ஐரோப்பிய அமெரிக்க ஆப்பிரிக்க சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து போகும் தீவு இது. Bermuda - வின் மக்கள் தொகை கொஞ்சம் தான். 2023 கணக்கீட்டின்படி 64,069 பேர் தான். வேடிக்கை என்னவென்றால் சென்ற ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு 64, 184 பேர் இருந்தனர். ஒரு 115 பேர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள் என்று Census ரிப்போர்ட் கூறுகிறது. இந்த பெர்முடாவுக்குவுக்கு மேற்கு பகுதியில் அட்லாண்டிக் கடலில் தான் அந்த பிரச்சனைக்குறிய முக்கோணம் உள்ளது. அதாவாது அமெரிக்காவின் தென்கிழக்கு தீவுகளான Miami; San Juan, Puerto Rico;  மற்றும் இங்கிலாந்தின் Bermuda இந்த பகுதிகளை இணைத்து ஒரு முக்கோண...

நாகை - காங்கேசன்துறை (இலங்கை) கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.

Image
நாகையிலிருந்து  காங்கேசன்துறைக்கு (இலங்கை) கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. நாகை மக்களின் நெடுநாளைய கனவு பூர்த்தியாகிறது.  இன்று 14.10.2023 சனிக்கிழமை நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு  கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து  கட்டுப்பாட்டுத் துறை, இந்திய சுங்கத் துறை  மற்றும் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இது இயங்கும் என்று கூறப்படுகிறது. தினமும் காலை 7 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் சுமார் 3½ மணி நேரம் பயணித்து 10.30 அல்லது 11 மணிக்கு இலங்கை காங்கேஸன் துறையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தினமும் காங்கேஸன்துறையிலிருந்து பிற்பகல் சுமார் 1½ மணிக்கு புறப்படும் இதே கப்பல் சுமார் 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும் என கூறப்படுகிறது. 14 கப்பல் ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பலாகும் இது. Ferry என இது அழைக்கப்படுகிறது. நாகப்பட்டினத்திலிருந்து குறுகிய தூரத்தில் (60 Nautical miles) உள்ள இலங்கை துறைமுகப் பகுதி காங்கேஸன்துறை தான் என்பதால் இந்த கடல் வழி போக்குவரத்து தற்பொழுது இவ்வாறு ...

கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்?

Image
கோரக்கர் யார்? எப்பொழுது உதித்தார்? தொகுத்தெழுதியவர்: வை.மகேந்திரன் இவர் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் என்பது அறிந்ததே. கோரக்கர் யார்? மனிதனாக பிறந்து தெய்வ சங்கல்பம் பெற்றாரா அல்லது தெய்வ பிறப்பாக ஜனனமாகி உருவகமானாரா..... வாருங்கள் இக்கதையை படங்களுடன்  வீடியோவாக MAHENDIRAN GLOBAL TV-யில் காண்போம். பிறப்பு இருவகை என்று வேதங்கள் கூறுகின்றன. கருமத்தின் பயனாக கருவாக உருவாகி பரிணாமம் ஆவது ஒன்று. இப்புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அப்படி ஆனவை தான். இன்னொன்று, சிவபெருமானின் ஆசியில் தெய்வப் பிறப்பாக உருவகம் ஆகி அமானுஷ்ய சக்திகள் பெற்று திகழ்வது. கோரக்கர் தெய்வ பிறப்பாக, தெய்வத்தால் உருவாக்கப்பட்டவர். ஒரு முறை, சமுத்திரத்திற்கு அருகே சிவபெருமான் உமையாளுக்கு போதனை செய்துகொண்டிருந்தார். உமையாள் அப்போதனைகளை கவனித்தாரோ இல்லையோ, அந்த சமுத்திரத்தில் உள்ள மீன் ஒன்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த மீன் துள்ளி குதித்தது. சிவபெருமான் வா இங்கே இன்று அதட்டி அந்த மீனை அழைத்தார். நெடுஞ்சானாக ஒரு முனிவர் ரூபத்தில் காட்சியளித்தது அந்த மீன். ஓம்...

கம்யூனிஸத்தில் ஜனநாயகமும் முதலாளித்துவமும் கைகோர்த்து விளங்கும் நாடு இது!

Image
க்யூபா ஒரு அற்புதமான சுவர்க்க பூமி என்று  சொன்னால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். நாட்டின் அழகு மட்டும் அல்ல ஆட்சிமுறையும் சூப்பரா இருக்கும் நாடு க்யூபா. க்யூபா பற்றி ஒரு மினி ஸ்டோரியை இங்கு காண்போம். ஸ்பெயினிடமிருந்து 1868-ல் கியூபா சுதந்திரம் பெற்றாலும் 1902-ல் தான் க்யூபா சுதந்திர அங்கீகாரம் அடைந்தது. குடியரசு ஆனது. 1959-ல் தான்! அரசாங்கம் சோசியலிசம் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதே பொதுவான சித்தாந்தம். நாட்டுப்பற்று இல்லேல் மரணம் என்கிற அளவுக்கு அனைவரும் நாட்டை நேசிக்கிறார்கள். தலைநகரம் அவானா பெரிய நகரமும் இதுவே. இரண்டாவது பெரிய நகரம் சான்டியாகோ, க்யூபாவின் மக்கள் தொகை சுமார் 11 மில்லியன் பேர். பரப்பளவு 1,10,860 ச.கி.மீ மொழி ஸ்பானிஷ். இனம் வெள்ளைக்காரர்கள் 64 மான் நிறத்தவர் 26 கியூபன் கருப்பினர் 10 60% கிறிஸ்தவம் 30 மதமில்லை 10 நாட்டுப்புற மதம். அழகான தீவு நாடுகளில் இதுவும் ஒன்று. கடற்கரை கண்ணை பறிக்கும் இங்கே என்பார்கள். சுற்றுலா பயணிகள் வருகைக்கு இது தான் சீசன் என்றில்லை. எப்பொழுதும் வருகிறார்கள். முழுக்க முழுக்க இலவச மருத்துவம் மற்றும் கல்வி. ...

சௌந்தரராஜபெருமாள் கோவில் நாகப்பட்டினம்.

Image
சௌந்தரராஜபெருமாள் கோவில் நாகப்பட்டினம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. 108 திருப்பதிகளில் 19 ஆவது திவ்ய தேசமாக விளங்கும் இவ்வாலயம் நான்கு யுகங்களாக வணங்கப்படும் ஸ்தலம் என்ற பெருமைக்குரியது. ஆலயத்தின் மூலவர்: நீலமேகப் பெருமாள். (நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்) இன்று 07.10.2023 புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை கனிசமான கூட்டம். மூலவரை தரிசித்து வரும்பொழுது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. உற்சவர்:சௌந்தர்யராஜன் தாயார்:சௌந்தர்யவல்லி உற்சவர்தாயார்:கஜலஷ்மி தீர்த்தம்:சாரபுஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன என்று குறிப்பிடுகிறது ஆலய நிர்வாகம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம் என கூறப்படுகிறது. ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியதாகவும் கூறப்படுகிறது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலமாகும் இது என்று கூறுகிறார்கள் வை...

நீங்கள் எந்த கட்சி ?

இப்படி ஒரு கேள்வியை யாரிடமாவது நீங்கள் கேட்டால், 100-ல் 36 பேர்கள் தான் இன்ன கட்சி என்று சொல்வார்களாம். மீதி 64 பேர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்களாம். ஆங்கிலத்தில் NEUTRALISTS என்பார்கள் இவர்களை. இவர்களை நம்பி தான் தேர்தல் நடக்கிறது என்பது ஒரு வியப்பான செய்தி. இவர்களை இலக்குவைத்து தான் இலவச அறிவிப்புகள்.  இவர்கள் நினைத்தால் ஆட்சியை மாற்றமுடியும். இவர்கள் பெரும்பாலும் கிராமத்து சாயலில் வாழ்பவர்கள். தேசப்பற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.  சமயத்தில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினர் கார்டு கூட இவர்களிடம்  இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்று கட்டாயமில்லை. இவர்களை பொருத்தவரை ஆட்சி என்பது ஒரு அதிகாரமேடை அது நேர்மையாக நடக்க வேண்டும்; ஆள்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள்.  இந்த வருடம் மேடையில் யார் இருக்கிறார்கள் அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை ரசிப்பது தான் இவர்கள் வேலை.  அரசியல் கட்சிகள்,  தேர்தல் வாக்குறுதி தருவதும், வாக்களிக்க தலைக்கு இத்தனை ரூபாய் காசு தருவதும் இவர்...